மா. தே. (மாற்றத்தின் தேர்வு)
மாற்றம் எப்போதுமே தவிர்க்க முடியாதது. குறைந்தது சுயத்தை சார்ந்தாகிலும் நேர்மறையான
மாற்றத்தின் கனவு எப்போதும் நம்மில் பெரும்பாலோருக்கு உள்ளது. நோக்கமும் ஊக்கமும் முயற்சியும்
சரியாக இல்லாததால், அதிகபட்சமாக பயன்படுத்தப்படாத தனிநபர்கள் மற்றும் குழுக்களின் திறன்களைப்
பார்க்கும்போது அது சோர்வடைய செய்கிறது. மா. தே. (மாற்றத்தின் தேர்வு) மக்களிடையே ஒரு
ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும், ஒவ்வொருவரும் தங்களுக்கு இருக்கும் சிறந்த திறன்களை
சிறந்த முறையில் பயன்படுத்தி மகிழ்ச்சியடைய ஒரு முன்முயற்சி ஆகும். இது பல்வேறு நலன்களையும்
திறமைகளையும் கொண்ட தன்னார்வலர்கள் மற்றும் நிபுணர்களின் வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது, மேலும் அவர்களின் முழு திறன்களையும் உணர்ந்து ஒரு அர்த்தமுள்ள விதத்தில்
பயன்படுத்த உதவ விளைகிறது, இதனால் தாங்களும் மற்றவர்களும் பயன் பெறுவர்.
இன்று வேகமாக நகரும் போட்டி நிறைந்த சூழலில் வாழ்கிறோம், இது நாம் மற்றவர்களை
மறந்து, சுயநலத்திற்கு நன்மை பயக்கும் எதையும் தொடரச் செய்கிறது, ஆனால் அது மற்ற நபரைப்
ஏதாவது விதத்தில் பாதிக்கலாம். நாம் சுயநல காரணங்களுடன் பிறந்து வளர்ந்துள்ளோம் மற்றும்
சுயநலம்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம். மக்களிடம் சமூகக் கண்ணோட்டத்தை மேம்படுத்துவதற்காக,
16 வயதிற்கு மேற்பட்டவர் (முதற்மையாக) பொது நன்மைக்காக அவர்களின் நேரம், பொருள் மற்றும்
திறமைகளை பங்களிக்க ஒரு இடத்தை உருவாக்குவதை மா. தே. (மாற்றத்தின் தேர்வு) நோக்கமாகக்
கொண்டுள்ளது.
இது பதிவு செய்யப்படாத மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பாக இருக்கும், மேலும் மா.
தே. (மாற்றத்தின் தேர்வு) ஒருபோதும் பிரபலத்தை நாடாது, ஆனால் ஒருங்கிணைந்த நிறுவனங்கள்
(குறிப்பாக இலாப நோக்கற்ற) அல்லது தனிநபர்களுக்கு ஆதரவு அளித்து அவர்கள் நிறுவப்படுவதில்
ஆர்வம் கொண்டு அவர்கள் மூலம் செயல்படும்.
நோக்கங்கள்:
தன்னிறைவு பெற்ற சமூகம்
பொறுப்பு மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்துதல்
நேரம், பொருள் மற்றும் திறமைகளை சரியாக பயன்படுத்துதல்
தலைமைத்துவத்தை வளர்த்தல்
தொலைநோக்கம்:
ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனத்தை உயர் மதிப்பீடுகளுடன் சாத்தியமான வழிகளில் நேர்மறையான
மாற்றத்திற்கான அதிகபட்ச திறனைப் பயன்படுத்த ஊக்குவிக்க.
பணித்திட்டம்:
ஒன்றுச்சேர்தல் மற்றும் ஒருங்கிணைப்புடன் சுயத்திடமும் மற்றவர்களிடமும் அன்பு
செலுத்துவதன் மூலம், ஒவ்வொருவர் நலனுக்காக எந்தவொரு காரியத்தினாலும் பாகுபாடு இல்லாமல்
மகிழ்ச்சி மற்றும் அமைதி அடைவதற்கு, சுய மற்றும் சமூகத்தின் நலன்களுக்கும் தேவைகளுக்கும்
ஏற்ப ஒரு நபர் அல்லது ஒரு அமைப்பை நம்பிக்கைக்குள்ளாக்குதல், ஈடுபடுத்துதல், மேம்படுத்துதல்,
அதிகாரப்படுத்துதல்.
சாத்தியமான செயல்பாடுகள்:
I. ஒரு கிராமம் / நகரம், தொகுதி, மாவட்டம், மாநிலம் மற்றும் தேசத்தில் சமூக
நலனில் ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒன்றுச்சேர்தல்.
II. தனிநபர்கள், சிறு குழுக்கள் அல்லது அமைப்புகளை சமூக நல நடவடிக்கைகளில் தன்னார்வலர்களாக
அடையாளம் காண்பது மற்றும் ஈடுபடுத்துதல்.
III. மக்களை அவர்கள் விரும்பும் அல்லது அவர்களுக்கு கிடைக்கக்கூடிய அணுகக்கூடியவை
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுடன் இணைத்தல்.
IV. தேவைக்கு / ஒரு காரியத்தில் ஆர்வத்திற்கு ஏற்றவாறு பயனுள்ள வகையில் ஒரு
குறிப்பிட்ட குழுவிற்கான பயிற்சி மற்றும் நிகழ்வுகளை நடத்துதல்.
V. நல திட்டங்கள் மற்றும் மக்களுக்கு உதவும் காரியங்கள் பற்றிய யோசனைகள் இருப்பினும்
நிதி இல்லாத நபர்கள் மற்றும் அமைப்புகளுடைய சமூக நல நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டுதல்.
VI. குறிப்பிட்ட குழுவின் தேவைக்கேற்ப வெவ்வேறு கருத்து, திட்டங்களுக்கான தொகுப்புரை,
சுவரொட்டிகள் மற்றும் உள்ளடக்கத்தை வடிவமைத்தல்.
VII. அறிக்கைகளை தொகுத்தல், தரவு பகுப்பாய்வு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்தல், தரவுகளை பதிவிடுதல், தரவுகள் சேகரித்தல்,
ஆராய்ச்சி மற்றும் தேவைக்கேற்ப பிற ஆவண வேலைகள்.
VIII. தேவைக்கேற்ப மதிப்பீடுகள், அடிப்படை திறன்கள் மற்றும் தலைமைத்துவத்தில்
தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயிற்சி மற்றும் ஆதரவு.
I. சமூக நலனில் ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும்
நிறுவனங்களின் சங்கம்
செயல்படும் விதம்:
ஒவ்வொரு தொகுதிக்கும் (கிராமங்கள் / நகரங்கள் / நகரங்கள் சேர்ந்தது) வெவ்வேறு
இடங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சேவை நிறுவனங்கள் இருக்கும், இதில் மக்கள் நலனுக்காக
பலர் பணியாற்றுவார்கள். ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு பிரதிநிதி கள அளவிலான சங்கத்தில் இருப்பார்.
கள அளவிலான சங்கங்களின் பிரதிநிதி ஒருவர் முதல் நிலை (மாவட்ட) சங்கத்தில் இருப்பார்.
முதல் நிலை சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் இரண்டாவது நிலை (மாநில) சங்கத்தில் இருக்க
வேண்டும். இரண்டாம் நிலை சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் மூன்றாம் நிலை சங்கத்தில் இருக்க
வேண்டும். தேவை இருந்தால் கிராமம் / நகரம் / நகர அளவில் உள்ளூர் சங்கம் இருக்கும்.
மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடத்திற்கு இருமுறை சங்கக் கூட்டம் கள மட்டத்தில் (மற்றும் உள்ளூரில்
இருந்தால்) முதலில் நடத்தப்படலாம் ஆனால் வெவ்வேறு நபர்களுடனும் நிறுவனங்களுடனும் தொடர்புடைய
குறிப்பிட்ட குழுக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி பிரதிநிதிகளிடையே
அடிக்கடி தொடர்பு இருக்கலாம். அதேபோல், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் முதல் நிலை
சங்கத்திற்கும், மே மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டாம் நிலை சங்கத்திற்கும், ஜூன்
மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்றாம் நிலை சங்கத்திற்கும் கூட்டம் நடத்தப்படலாம்.
ஒரு பேரழிவு அல்லது தொற்றுநோய் அல்லது கலவரம் போன்ற அவசர நிலை இருந்தால், இடையில் கூடலாம்.
மற்றும் தனிநபர்கள் வெவ்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சேவை நிறுவனங்கள்
அடுத்த 6 மாதங்களுக்கான திட்டங்கள் பணிகள் பற்றிய சுருக்கமான அறிக்கையை கூட்டத்தின்
போது வழங்கலாம்.
வெவ்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சேவை நிறுவனங்கள் இணைந்து
பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யலாம்.
மேம்பாடுகளுக்கான பரிந்துரைகள் பகிரப்படலாம், மேலும் புதியதைத் தொடங்குவதற்கான
பரிந்துரைகளையும் கூறலாம்.
பொறுப்பிடங்கள் மற்றும் பொறுப்புகள்:
முதல் கூட்டத்தில் தேர்தல் / தேர்வின் அடிப்படையில் மாறும் சங்க (வருடத்திற்கு)
உறுப்பினர்கள் தேந்தெடுக்கப்படலாம். ஒருமுறை சங்கத்தின் பங்காளராக இருந்த ஒருவர் அடுத்த
8 ஆண்டுகளுக்கு ஒரே சங்கத்தில் மீண்டும் உறுப்பினராக இருக்க மாட்டார் (பல முகங்களுக்கு
வாய்ப்பு கிடைக்கும் வகையில்) (நான்கு நிலை சங்கங்களுக்கும் இது பொருந்தும்). அந்த
நபர் மற்ற மூன்று நிலை சங்கங்களில் ஏதேனும் ஒரு பகுதியாக இருக்கலாம்.
கூட்டத்தை கூட்டி நடத்துவதற்கு தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளரை சங்கம் தேர்தல்
/ தேர்வு செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்கும், அதனுடன் அனைத்து பிரதிநிதிகளும் தகவல்கள்
களத்தில் சென்று சேர வேண்டியவருக்கு சேர்வதை உறுதிசெய்ய வேண்டும்.
II. தன்னார்வலர்களை அடையாளம் கண்டு ஈடுப்படுத்தல்
செயல்படும் விதம்:
மக்கள் நலனுக்காக சில நபர்கள் உழைப்பார்கள். சமூக நல நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள
புதிய நபர்களை பயிற்சிக்கு உட்படுத்துவதற்கு / ஈடுபடுத்துவதற்கு அவர்கள் வாரத்திற்கு
2 மணிநேரம் என சிறிது நேரம் ஒதுக்கலாம்.
சமூகங்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சந்தித்து, அருகிலுள்ள
நபர்களுடன் சேர்ந்தோ அமைப்புகளின் மூலமாகவோ சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட தனிநபர்களையும்
குழுக்களையும் ஈடுபடுத்த முயற்சிக்கலாம்.
III. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுடன் இணைத்தல்
மக்களின் நலனுக்காக உழைப்பவர்கள் நிச்சயமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைத்
தேடும் மக்களுடன் இணைக்கப்பட்டு இருப்பார்கள்.
மக்களின் நலனுக்காக பணியாற்றத் தயாராக உள்ளவர்கள், கல்விக்கு ஆதரவு அளிக்கும்
மக்கள் மற்றும் வேலை காலியிடங்களை அறிந்த மற்றவர்களுடனும் மக்களின் நலனுக்காக வேலை
செய்யும் பிற நபர்களுடனும் இணைக்கப்பட்டு இருப்பார்கள், தொடர்ந்து அவர்களும் கல்விக்கு
ஆதரவு அளிக்கும் மற்றும் வேலை காலியிடங்களை அறிந்து இருப்பார்கள்.
IV. நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளை நடத்துதல்
விழிப்புணர்வு மற்றும் சமூக அமைப்புகள் போன்ற நிகழ்ச்சிகள் முதல் வேடிக்கை நிகழ்ச்சிகள்
வரை தேவைப்படலாம் நேரம், யோசனைகள் அல்லது வளங்கள் இல்லாததால் விடப்படலாம.
ஒரே மாதிரியான தேவைக்காகவும் ஒரே மாதிரியான ஆர்வத்திலும் பணிபுரியும் தனிநபர்கள்
அல்லது அமைப்புகள் பொதுவாக பயன்படும் நிரல் / நிகழ்வைத் சேர்ந்து திட்டமிட, செயல்படுத்த
வேண்டுகோள் விடுக்கலாம்.
V. நல திட்டங்கள் மற்றும் மக்களுக்கு உதவும்
காரியங்கள் பற்றிய யோசனைகள் இருப்பினும் நிதி இல்லாத நபர்கள் மற்றும் அமைப்புகளுடைய
சமூக நல நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டுதல்
தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மக்களின் நலனுக்காக நல்ல திட்டங்களையும் ஏற்பாடுகளையும்
கொண்டிருக்கலாம், ஆனால் போதுமான நிதி இல்லாமல் இருக்கலாம்.
குறிப்பிட்ட செயல்பாட்டை ஆதரிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதற்காக பணிபுரியும் தனிநபர்கள்
அல்லது நிறுவனங்களுடன் இணைக்கப்படுவார்கள்.
நிதி திரட்டும் நிகழ்வுகள் மற்றும் உத்திகள்- உதாரணமாக வேலையில்லாதவர்கள் ஆனால்
ஏதாவது திறமையான நபர்களின் வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது, ஆதரவு
பெட்டிகளை வைப்பது, நிறுவனங்கள் அல்லது நிதி நிறுவனங்களை அணுகுவது போன்றவற்றை தனிநபர்களுக்கும்
நிறுவனங்களுக்கும் ஏற்பாடு செய்யலாம்.
VI. குறிப்பிட்ட குழுவின் தேவைக்கேற்ப வெவ்வேறு
கருத்து, திட்டங்களுக்கான தொகுப்புரை, சுவரொட்டிகள் மற்றும் உள்ளடக்கத்தை வடிவமைத்தல்.
தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் சமூக நல காரியங்களைச் செய்ய ஆர்வம் கொண்டிருக்கலாம்,
ஆனால் அவர்கள் செய்ய விரும்பும் திட்டத்திற்கான கருத்து, திட்டம், சுவரொட்டிகள் அல்லது
உள்ளடக்கத்தை வடிவமைக்க முடியாமல் போகலாம்.
பணிகளில் நிபுணத்துவம் வாய்ந்த நபர்கள், பணியின் ஆதரவிற்காக இணைக்கப்படலாம்,
ஆர்வமும் அக்கரையும் முடிந்திடாமல் தொடர்ந்து முன்னேரலாம்.
VII. ஆவண வேலைகள் தேவைக்கேற்ப.
தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் ஏற்கனவே நல்ல சமூக நல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்,
ஆனால் அறிக்கைகளின் ஒருங்கிணைப்பு, தரவு பகுப்பாய்வு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு,
தரவு பதிவேற்றம் செய்தல், தரவுகளை சேகரித்தல், ஆராய்ச்சி போன்ற ஆவண வேலைகளுக்கான திறமை
இல்லாதிருக்கலாம்.
ஆவணப்படுத்தல் பணியில் நிபுணத்துவம் வாய்ந்த நபர்கள், பதிவு மற்றும் பகுப்பாய்வு
பணியில் உதவ இணைக்கப்படலாம்.
VIII. தேவைக்கேற்ப மதிப்பீடுகள், அடிப்படை
திறன்கள் மற்றும் தலைமைத்துவத்தில் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயிற்சி மற்றும்
ஆதரவு.
தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் ஏற்கனவே சமூக நல செயல்பாடுகளைச் செய்து கொண்டிருக்கலாம்,
அவர்களின் முன்னோக்கை மாற்றி இன்னும் சிறப்பாகச் செயல்பட அடிப்படை திறன்கள் / மதிப்பீடுகளில்
பயிற்சி அல்லது ஆதரவு தேவைப்படலாம்.
பயிற்சி அளிப்பதற்கு அடித்தள திறன்கள் / மதிப்பீடுகளில் பயிற்சி மற்றும் ஆதரவில்
நிபுணத்துவம் வாய்ந்த நபர்கள் இணைக்கப்படலாம்.
ஒழுங்குமுறைகள்:
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கிய ஒரு தனிநபர் அல்லது அமைப்பின் பணிக்கான தீர்மானம்
அல்லது வேலை, வேலை செய்யும் முறையின் நிபுணத்துவத்தில் மற்றும், உள் விஷயங்கள் மற்றும்
கொள்கைகளிலோ தலையீடு இருக்காது.
உயர்ந்த மதிப்புகள் மற்றும் தரங்களைக் கொண்ட நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கங்களில்
சமரசம் இருக்காது.
குறிப்பிட்ட மக்கள் அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கும் காரியங்கள், தவறான மேலாண்மை
அல்லது தவறாக கையாளுதலுக்கான ஒரு தனிநபர் அல்லது அமைப்பு மீதான குற்றச்சாட்டுகள் சரியான
ஆதாரத்துடன் மட்டுமே முன்வைக்கப்பட வேண்டும்.
குற்றம் சாட்டப்படுவதையும் குற்றம் சாட்டுவதையும் விட திருத்தங்கள் மற்றும்
மேம்பாடுகள் சிறந்த விதத்தில் கவனம் செலுத்தப்படும்.
கடந்த கால வாழ்க்கை, இருப்பிடம், சாதி, மதம், உடைமை, பதவி, வேலை, அல்லது மொழி
ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நபரின் மீது பாகுபாடு அல்லது சீரழிவு எந்தவொரு காரணத்தை
கொண்டும் வரவேற்கப்படாது பொறுத்துக்கொள்ளப்படாது.
ஊதியம்:
தொழிலாளி அவர்களின்
ஊதியத்திற்கு தகுதியானவர். எனவே ஆதரவாளர்கள் அல்லது உதவுபவர்கள் தகுதியான நலன்புரிப்
பணிகளில் ஈடுபடும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுடன் இணைக்கப்படுவார்கள். அதே நேரத்தில்,
தன்னார்வலர்கள் எந்தவொரு கோரிக்கையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் வேலையை முழுமையாக
செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சிறந்ததை வழங்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
குழுக்கள் அல்லது
அமைப்புகளுக்கான பணிகள்: ஒரு மணி நேர வேலைக்கு ரூ 0-200 / பயனாளி + பயண மற்றும் பொருட்கள்
உள்ளிட்ட பிற செலவுகள்
அரை நாள் வேலைக்கு
ரூ. 0-350 / பயனாளி (3-4 மணி) + பயணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்ட பிற செலவுகள்
ஒரு முழு நாள்
வேலைக்கு ரூ. 0-500 / பயனாளி (6-8 மணி) + பயணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்ட பிற செலவுகள்
ஒரு தனிநபர்
/ நிறுவனத்திற்கான பணிகள்:
ஒரு மணி நேர
வேலைக்கு ரூ.0-500 + பயணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்ட பிற செலவுகள்
எப்போதும் வேலைக்கான
செலவுகள் இருந்தாலும், செலவுகள் கவலையளிக்க தேவையில்லை. பயனடையும் ஒரு தனிநபர் / குழு,
அவர்கள் உண்மையிலேயே தகுதியுள்ளவர்களாக இருந்தால், சாத்தியமானதை வழங்கலாம் அல்லது எந்தவொரு
செலவும் இன்றி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு தன்னார்வலரால் செய்யப்பட்ட பொருள்
செலவுகளையாவது உதவுபவர்கள் மூலம் வழங்க முயற்சிப்போம்.

Comments
Post a Comment