தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி
தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி
அறிமுகம்:
பாகுபாடுகள், தாக்கங்கள் மற்றும் அடிமையாதல் ஆகியவற்றின் மத்தியில், மக்களிடம்
நேர்மறையான மாற்றத்திற்கான விருப்பம் இருந்தாலும், நம்பிக்கையுடனும் பொறுப்புடனும்
இருப்பது மிகவும் கடினம். அவர்கள் விரும்பும் அல்லது சிறந்திருக்கும் எந்தவொரு திறனையும்
அதிகபட்சமாகப் பயன்படுத்த ஆர்வங்களை ஊக்குவிப்பதும் உருவாக்குவதும் முக்கியம்.
வேகமாக வளரும் சூழலில் ஒரு தன்னிறைவு பெற்ற சமூகமாக இருக்க, மக்கள் மாற்றத்தை
உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும், அதற்கு ஒருவருக்கொருவர் உத்வேகம் அளிக்க வேண்டும்.
கவனம் செலுத்தப்படும் குழுக்கள்:
கிராமங்கள் / பகுதிகளில் உள்ளவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு பயிற்சி
/ ஆதரவு வழங்கப்படலாம். நிர்ணயிக்கப்பட்ட வயதினர் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்,
மற்றும் சுற்றியுள்ள சமூகத்திற்கு சாதகமாக ஏதாவது பங்களிக்க ஆர்வமுள்ள எவரும். ஒரு
சிறந்த குழு 8-12 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும். தலைமைத்துவ மேம்பாட்டுத் பயிற்சி,
மக்கள் தங்களை முழுமையாய் வளர்த்துக் கொள்வதற்கும், தலைமைத்துவ குணங்கள் மற்றும் பொறுப்புகள்
மூலம் அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தளமாக இருக்கலாம்.
பயிற்சி செயல்பாடுகள்:
பின்வரும் பயிற்சிகள் மக்களுக்கு ஒரு திட்டமிடப்பட்ட நேரத்தில், வாரத்திற்கு
ஒரு முறை, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை, தலைமைத்துவ மேம்பாட்டு
கருப்பொருளிலும் நோக்கிலும் நடத்தப்படும்.
|
வ.எண். |
மையத்தலைப்பு |
நோக்கம் |
பரிந்துரை செயல் திட்டம் |
|
1 |
நல்ல தலைமைத்துவமும் அதின் தேவையும் |
நல்ல தலைவருடைய பண்புகளை உணர்வதற்கும், தாக்கங்களை புரிந்துக்கொள்வதற்கும்
|
சமூகத்தில் உள்ள பிரச்சனைகள்
மற்றும் சமூக நடவடிக்கையின் அவசியம் |
|
2 |
முன் உதாரமான சிறந்த தலைவர்கள் |
வாழ்வில் சிறந்த தலைவர்களை முன் உதாரணங்களாக கொண்டு
ஊக்கப்பட |
குறிப்பிட்ட குழக்களாகிய குழந்தைகள்,
இளைஞர்கள், உடல் ரீதியாக சவால் அடைந்தவர்கள் போன்ற வர்களின் ஆர்வங்களையும் தேவைகளையும்
அடையாளம் காணுதல். |
|
3 |
மற்றவர்கள் மீது கரிசனை |
சுற்றியுள்ள மக்கள் மீது உண்மையான கரிசனையும் அக்கறையும்
கொள்ள |
விழிப்புணர்வு நிகழ்ச்சி (சமூகத்தில்
தேவைப்படும் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்) |
|
4 |
தொடர்ந்து கற்றல் |
சுயத்தையும், புதிய காரியங்களையும், உலகில் உள்ள
தகவல்களையும் தெரிந்துக்கொண்டு மேம்பட |
சமூகத்தில் உள்ள ஒரு பிரச்சனையை
தீர்க்க முயற்சித்தல்/ ஒரு விஷயத்தை ஆதரித்தல் |
|
5 |
மற்றவரை மேன்மையாக கருதுதல் |
அனைவருக்கும் முக்கியத்துவம் அளித்து அவர்களுடைய உணர்வையும்
சிந்தனைகளையும் மதிக்க |
ஒரு சிறிய நூலகத்தை உருவாக்குதல்
(இது தேவையின் அடிப்படையில் வேறு சில செயல்களாகவும் இருக்கலாம்) |
|
6 |
இடைவெளிகளை நிரப்புதல் |
தனிப்பட்ட தவறிற்கோ, குழுவாக செய்த தவறிற்கோ
பொறுப்பேற்று அதை சரி செய்ய |
சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு
செல்வந்தர்களின் ஆதரவுடன் உதவுதல் |
|
7 |
வளங்களை கையாளுதல் |
சுற்றியுள்ள வெவ்வேறு வளங்களை அறநெறிகளை கொண்டு சிறந்த
முறையில் கையாள |
சமூகத்தில் உள்ள திறமையான மற்றும்
திறமையற்ற நபர்களைப் பற்றி நெறிமுறை மற்றும் தார்மீக ரீதியில் பல்வேறு வளங்களை திறம்பட
நிர்வகிக்க |
|
8 |
முன் உதாரணமாக இருத்தல் |
பயனுள்ள நேர்மறையான வழியில் சுற்றியுள்ளவர்களுக்கு உபயோகமாக
இருக்க |
சமூகத்தில் விளையாட்டு / பொழுதுபோக்கு
நிகழ்ச்சி |
|
9 |
விட்டுக்கொடுக்க கூடாத பற்றுறுதிகள் |
நேர்மையாக நிறைய காரியங்களை கருத்தில் கொண்டு உண்மையை
விட்டுக்கொடுக்காமல் நிலைநிற்க |
விழிப்புணர்வு நிகழ்ச்சி (சமூகத்தில்
தேவைப்படும் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்) |
|
10 |
தலைவரின் வெற்றி |
குழுவின் முழுமையான வெற்றியே ஒரு தலைவரின் வெற்றி என்பதை உணர |
சமூகத்தில் துப்புரவு பிரச்சாரம்
மற்றும் பணியை மேற்க்கொள்ளலாம் |
குறிப்பு: குழுவின் தேவையின் அடிப்படையில் பயிற்சிகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட செயல் திட்டங்கள் மாற்றத்திற்கு உட்படுத்தப்படலாம்.
தொடர் ஆதரவு செயல்பாடுகள்:
மக்களின் வளர்ச்சிக்கு உதவும் தனிநபர்கள் / குழுக்களின் பல்வேறு செயல்பாடுகள்
மற்றும் மக்கள் நலனுக்கான சிறப்பு கண்டுபிடிப்புகள், அதில் ஆர்வமுள்ள தனிநபர்கள் /
அமைப்புகள் மூலம் ஆதரிக்கப்படும்.
செயல்படும் விதம்:
தலைவர்களை வளர்ப்பதில் ஆர்வமுள்ள ஒரு தனிநபர் அல்லது ஒரு அமைப்பு, அருகிலுள்ள
சமூகத்தில் உள்ள மக்களைச் சந்தித்து, தலைமைத்துவ மேம்பாட்டு யோசனையைப் பற்றி மக்கள்
/ தலைவர்கள் / செல்வாக்கு மிக்கவர்கள் / உள்ளூர் நிறுவனங்கள் / குழுக்களின் தலைவர்
ஆகியோருடன் பகிர்ந்து கொண்டு ஏற்றுக்கொள்பவர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் அடையாளம்
காண முயற்சிக்கலாம். சிலர் மட்டுமே இருந்தாலும்கூட, வாரந்தோறும், இரண்டு வாரங்களுக்கு
ஒரு முறை அல்லது மாதந்தோறும் 1-1.5 மணிநேரத்திற்கு சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு
கூடலாம், யோசிப்பது மற்றும் செயல் புரிவதை தொடங்கலாம்; மெதுவாக மக்கள் சேர்க்கப்படலாம்.
கூட்டத்திற்கு அப்பால் தொடர்ச்சியான ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கலாம்.
ஒரு குழுவின் தலைமைத்துவ வளர்ச்சியை இந்த முறையில் மிதமான வழியில் வழிநடத்துவதற்கான சராசரி நேரம் 3-4 மணிநேரம். இதில் தயாராகுதல், பயணம் மற்றும் உறுதிசெய்யப்பட்ட நேரத்தின் அடிப்படையில் வாரம்/ இரண்டு வாரம் / மாதத்திற்கான நேரம் அடங்கியிருக்கும். இது ஒட்டுமொத்த வாரத்தின் நேரத்தின் 2%, இரண்டு வாரங்களின் நேரத்தின் 1% மற்றும் மாதத்தின் நேரத்தின் 0.5%. வெறும் பொழுதுபோக்கு அல்லது தனிப்பட்ட நலன்களுக்காக நாம் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.
குறிப்பு: தலைமைத்துவ
மேம்பாட்டுத் திட்டத்திற்கான சில ஆதாரங்கள் புதுப்பிக்கப்பட்டு, leadersleadershiptamil.blogspot.com இல்
இருக்கும்.
ஊதியம்:
பங்குப்பெறும் தனிநபர்
/ நிறுவனத்தின் பொருளாதார வருவாய்க்கு ஏற்ப ஒரு நபருக்காக செய்யும் ஒரு மணி நேர வேலைக்கு ரூ.
0-500 பெறலாம்.
Comments
Post a Comment