வாழ்க்கைப்பணி மேம்பாட்டு திட்டம்

வாழ்க்கைப்பணி மேம்பாட்டு திட்டம்

"சரியான முறையில் தேர்வுசெய்து தொடர வாழ்க்கைப்பணியையும் வாய்ப்புகளையும் வெளிப்படுத்துதல்"

அறிமுகம்:

வாழ்க்கைப்பணி என்பது வாழ்வதற்கான வேலையைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வாழ்க்கைப்பணி மேம்பாட்டுத் திட்டம் உதவும். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைச் சமநிலைப்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள், திறன்கள் மற்றும் ஆர்வங்களைப் பயன்படுத்துவது வாழ்க்கைப்பணி என்பதை மக்கள் புரிந்துகொள்ள இது உதவும். வாழ்க்கைப்பணி மேம்பாட்டுத் திட்டம், வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய பல்வேறு தேர்வுகளை அறிந்து கொள்ளவும், பொருத்தமான வாழ்க்கைப்பணியை தொடரவும் வாழ்க்கையில் சிற்ந்த விதத்தில் இலக்குகளை நிர்ணயிக்கவும் மக்களுக்கு உதவும்.

தொடர்ச்சியான ஆதரவு:

ஒரு குறிப்பிட்ட துறை அல்லது வேலைக்குத் தேவையான மற்றும் பொருத்தமான பல்வேறு திறன்களையும் அறிவையும் மக்கள் அறிந்து கொள்வார்கள், அவர்கள் தங்கள் லட்சியத்தை அடைய தங்களை தகுதிப்படுத்திக்கொள்வார்கள். மக்கள் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்பப் பள்ளிகள், கல்லூரிகள், அவர்களைச் சுற்றியுள்ள திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களைப் பற்றி வெளிப்பாடு அடைவார்கள். தேவைப்படும் நபர்களுக்குச் சிறப்பு நிபுணர்களின் உதவியுடன் அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப வாழ்க்கைப்பணியை தொடர, கற்றலுக்கான காரியங்களுடன் ஊக்கம் அல்லது வழிகாட்டுதல் மூலம் ஆதரவு அளிக்க முடியும். வேலை வாய்ப்புகளைத் தேடும் நபர்களும், தொழில்முனைவோராக இருக்க ஆர்வமுள்ளவர்களும், பிற நபர்களின் உதவியுடன் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஊக்கமும் ஆதரவும் பெற முடியும்.

எதிர்பார்க்கப்படும் பயன்கள்:

வாழ்க்கைப்பணி மேம்பாட்டுத் திட்டம் மக்களின் வாழ்க்கைக்கான திசையையும் நோக்கத்தையும் கொடுக்கும் அல்லது பலப்படுத்தும். இது அவர்களின் எண்ணங்களைத் தூண்டிவிட்டு, அவர்களின் லட்சியத்தை அடைவதற்குத் தேவையான பல்வேறு திறன்களை அறியவும் தனிப்பட்ட, தொழில்முறை மற்றும் சமூக வளர்ச்சியை நோக்கித் தொடரவும் உதவும்.

தங்கள் எதிர்காலத்தைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காத இளைஞர்கள் அல்லது மக்கள் வெவ்வேறு தொழில் விருப்பங்களையும் வாய்ப்புகளையும் பற்றிய அறிவால் லட்சியத்தை யோசிப்பார்கள். அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வெவ்வேறு வாய்ப்புகளைப் பற்றிய அறிவு, பல்வேறு கஷ்டங்களால் அவர்கள் உணரும் இடையூறுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க அவர்களுக்கு உதவும்.

வெவ்வேறு விஷயங்களில் வெளிப்பாடு பெறும் இளைஞர்கள் அல்லது மக்கள் வெவ்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்கள் நடத்தை மற்றும் வேலைத் திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள், மேலும் தேசத்தின் பொறுப்பான மற்றும் நம்பிக்கையான குடிமக்களாக மாறுவதற்கான சிந்தனையைப் பெறுவார்கள்.     

செயல்படும் விதம்:

மக்களின் வாழ்க்கைப்பணி வளர்ச்சியில் ஆர்வமுள்ள ஒரு தனிநபர் அல்லது ஒரு அமைப்பு தேவையில் உள்ளவர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் அடையாளம் காண அருகிலுள்ள சமூகத்தில் உள்ள மக்களைச் சந்தித்து, வாழ்க்கைப்பணி மேம்பாடு குறித்த யோசனையைப் பற்றி மக்கள் / தலைவர்கள் / செல்வாக்கு மிக்க நபர்கள் / உள்ளூர் நிறுவனங்கள் / குழுக்களின் தலைவர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டு தொடங்க முயற்சிக்கலாம். 

அறியாதவர்களாகச் சிலர் புறக்கணிக்கும் போது ஏமாற்றமளிக்கலாம் ஊக்கமின்மையை ஏற்படுத்தலாம், ஆனால் அவற்றைப் புறக்கணித்துத் தேவைப்படுபவர்களுக்கு கவனம் செலுத்த வேண்டும். மூன்று முறை தொடர்ந்து பின்தொடர்ந்த பிறகு, புற்க்கணிப்பவர்களை விட்டுவிடலாம்.

ஆரம்பத்தில், சுயத்தைப் புரிந்துகொள்வது, இலக்குகளை அமைப்பது, வெவ்வேறு வாழ்க்கைப்பணி தேர்வுகள் மற்றும் தேவைப்படும் பல்வேறு திறன்கள் குறித்து அறிவதற்கு தேவையான உள்ளடக்கத்தைச் சுருக்கமாக முன்வைக்கச் சுமார் 1.5 மணிநேரம் எடுக்கப்படும், 10 க்கும் மேற்பட்ட நபர்களுடன் முறையான சந்திப்பாக இருந்தால். இது தனித்தனியாக முறைசாரா முறையிலும், எந்த எண்ணிக்கையும் உள்ள குழுவிற்கு முறையாகவும் செய்யப்படலாம். பங்கேற்பாளர்கள்கள் 13 வயதுக்கு மேல் இருப்பார்கள். தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுவினருக்கான தொடர்ச்சியான பின்தொடர்தலுக்கான நேரம் தேவைக்கேற்பவும், இருக்கும் நேரத்திற்கும் ஏற்ப மாறுப்படலாம். 

குறிப்பு: வாழ்க்கைப்பணி மேம்பாட்டுத் திட்டத்திற்கான சில ஆதாரங்கள் புதுப்பிக்கப்பட்டு, careerdevelopment2020.blogspot.com & cpakkt2020.blogspot.com   இல் இருக்கும்.

ஊதியம்:

பங்குப்பெறும் தனிநபர் / நிறுவனத்தின் பொருளாதார வருவாய்க்கு ஏற்ப ஒரு நபருக்காகச் செய்யும் ஒரு மணி நேர வேலைக்கு ரூ. 0-500 பெறலாம்.  

 

Comments