சமூக நலனில் ஆர்வமுள்ள நிறுவனங்கள்/ தனிநபர்களின் ஒருங்கிணைப்பு

சமூக நலனில் ஆர்வமுள்ள நிறுவனங்கள்/ தனிநபர்களின் ஒருங்கிணைப்பு

அறிமுகம்:

நாம் சில பெரிய காரியங்களைத் தனியாகச் செய்ய முடியும், ஆனால் நாம் ஒன்றாகச் செய்யும்போது பல சிறந்த காரியங்களை மிகவும் திறமையாகவும் பரந்த அளவிலும் செய்ய முடியும். நிறுவனங்கள் / தனிநபர்களால் ஒரு குறிப்பிட்ட குழுவிற்காகச் செய்யப்படும் நற்செயல்கள் ஒருங்கிணைத்தல் மற்றும் தகவல்தொடர்பு பரிமாற்றத்தால் தொலைதூர பகுதிகளைக் கூட அடைய முடியும். ஒவ்வொரு நிறுவனமும் / தனிநபரும் தங்கள் வழியில் அவர்களின் திறனுக்கேற்ப செயல்படுவார்கள், ஆனால் அவர்களின் நற்செயல்கள் தொடர்பு கொள்ளப்படும்போது அது பொருந்தக்கூடிய இடங்களில் பயனாளிகளைச் சேரும், மற்றும் அக்கரையுள்ள மக்களிடமிருந்து ஆதரவை பெறவும் செயல்திறனை அதிகரிக்கவும் முடியும். மேலும், வளங்களைச் சமமாக விநியோகிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. நலப் பணிகள் எட்டப்படாத இடங்களை அடையக்கூடும்.

செயல்படும் விதம்:

ஒவ்வொரு தொகுதிகளிலும் (கிராமங்கள் / நகரங்கள் / நகரங்கள் சேர்ந்தது) வெவ்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சேவை நிறுவனங்கள் இருக்கும், இதில் மக்கள் நலனுக்காகப் பலர் பணியாற்றுவார்கள். ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு பிரதிநிதி கள அளவிலான செயற்குழுவில் இருப்பார். கள அளவிலான செயற்குழுக்களின் பிரதிநிதி ஒருவர் முதல் நிலை (மாவட்ட) செயற்குழுவில் இருப்பார். முதல் நிலை செயற்குழுவின் பிரதிநிதி ஒருவர் இரண்டாவது நிலை (மாநில) செயற்குழுவில் இருப்பார். இரண்டாம் நிலை செயற்குழுவின் பிரதிநிதி ஒருவர் மூன்றாம் நிலை (தேசம்) செயற்குழுவில் இருப்பார். தேவை இருந்தால் கிராமம் / நகரம் / மாநகரம் அளவில் உள்ளூர் சங்கம் இருக்கலாம்.

மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடத்திற்கு இருமுறை செயற்குழு கூட்டம் கள மட்டத்தில் (மற்றும் உள்ளூர் மட்டத்தில் இருந்தால்) முதலில் நடத்தப்படலாம் ஆனால் வெவ்வேறு நபர்களுடனும் நிறுவனங்களுடனும் தொடர்புடைய குறிப்பிட்ட குழுக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிப் பிரதிநிதிகளிடையே அடிக்கடி தொடர்பு இருக்கலாம். அதேபோல், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் முதல் நிலை செயற்குழுவிற்கும், மே மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டாம் நிலை செயற்குழுவிற்கும், ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்றாம் நிலை செயற்குழுவிற்கும் கூட்டம் நடத்தப்படலாம். ஒரு பேரழிவு அல்லது தொற்றுநோய் அல்லது கலவரம் போன்ற அவசர நிலை இருந்தால், இடையில் கூடலாம்.

மற்றும் தனிநபர்கள் வெவ்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசு சேவை நிறுவனங்களும் அடுத்த 6 மாதங்களுக்கான திட்டங்கள் பணிகள் பற்றிய சுருக்கமான அறிக்கையை செயற்குழு கூட்டத்தின் போது வழங்கலாம்.

வெவ்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சேவை நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யலாம்.

மேம்பாடுகளுக்கான பரிந்துரைகள் பகிரப்படலாம், மேலும் புதியதைத் தொடங்குவதற்கான பரிந்துரைகளையும் கூறலாம். அது ஒரு அமைப்பு / தனிநபரின் தேவை அல்லது சாத்தியத்திற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்படலாம் / விட்டுவிடப்படலாம்.

பொறுப்பிடங்கள் மற்றும் பொறுப்புகள்:

முதல் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் / தேர்வு செய்தல் அடிப்படையில் வருடத்திற்கு ஒரு முறை மாறும் செயற்குழு உறுப்பினர்கள் தேந்தெடுக்கப்படலாம். ஒருமுறை செயற்குழுவின் பங்காளராக இருந்த ஒருவர் அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஒரே குழுவில் மீண்டும் உறுப்பினராக இருக்க மாட்டார் (பல முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில்), நான்கு நிலை குழுக்களுக்கும் இது பொருந்தும். அந்த நபர் பங்கேற்காத மற்ற மூன்று நிலை செயற்குழுக்களில் ஏதேனும் ஒன்றில் பிரதிநிதியாக இருக்கலாம்.

கூட்டத்தை கூட்டி நடத்துவதற்கு தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளரை செயற்குழுவில் தேர்தல் / தேர்வு செய்தல் செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்கலாம், அதனுடன் அனைத்து பிரதிநிதிகளும் தகவல்கள் களத்தில் சென்று சேர வேண்டியவருக்குச் சேர்வதை உறுதிசெய்ய வேண்டும்.

ஆயத்த பணி:

ஒரு தொகுதி / மாவட்டத்தில் உள்ள அமைப்புகளை ஒருங்கிணைக்க, முதலில் ஒரு தொகுதி / மாவட்டத்தில் உள்ள அமைப்புகளின் மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண் போன்ற தொடர்பு விவரங்களை அடையாளம் காண வேண்டும். https://ngodarpan.gov.in போன்ற தொண்டு நிறுவனங்களை பற்றிய வளைதளங்கள் மூலம் இதைக் காணலாம், அதில் விவரங்கள் கிடைக்கின்றன. முடிந்தால், வட்டாரத்தைச் சுற்றியுள்ள வெவ்வேறு இடங்களுக்குச் சென்று மக்களிடம் விசாரிக்கலாம். எம்.எஸ். எக்செல் போன்ற மென்பொருள் மற்றும் இணையத்தை பயன்படுத்தும் அறிவைக் கொண்ட ஒரு நபர் தரவைச் சேகரித்து மின்னஞ்சல் வழியாகவோ அல்லது நேரில் தொடர்புக்கொண்டு ஒருங்கிணைப்பை பற்றிய யோசனையைப் பகிர்ந்து கொள்ளலாம்.

குறிப்பு: நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிப்பதற்கான சான்று எக்செல் தாளை http://tiny.cc/orgdetailsformat இல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். சமூக நல நடவடிக்கைகளுக்குப் பயனளிக்கும் சில ஆதாரங்கள் புதுப்பிக்கப்பட்டு http://cfac2020.blogspot.com இல் இருக்கும்.


Comments